31.10.11

கல்பாக்கம் பாதுகாப்பானதா?


கல்பாக்கம் அணு மின் நிலையம் பற்றிய சில செய்திகளை பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக சிலர் எழுப்பும் வாதம் - கல்பாக்கம் ஒழுங்காக இயங்க வில்லையா?

பூவிலகின் நண்பர்கள் கடந்த இருபத்தி இரண்டாம் தேதி சென்னையில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் ரமேஷ் என்பவர் பேசிய காணொளியை கீழே இணைத்துள்ளேன். அதில், எப்படி மாநில அரசில் உள்ளவர்கள் அணுஉலை குறித்த செய்திகளைத் தெரிந்து கொள்ளலாமே இருந்தார்கள் என்றும், கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் அமைத்த பொது பின்பற்றப் படாத முறைகள் குறித்தும், மாதிரி எவாகுவேஷன் செய்த போது ஏற்பட்ட குளறு படிகளும், சுனாமி வந்த போது வெளிவராத உண்மைகளும், பாதுகாப்பற்ற சூழலையும் சுனாமி வந்ததற்குப் பிறகு ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் சுனாமி அலெர்ட் வந்தபோது எப்படி மந்தமான சூழல் அங்கே இருந்தது என்பது பற்றியும் தனது அனுபவங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
அது மட்டுமல்ல,
கல்பாக்கம் சுனாமி எல்லைக்குள் வராது என்று சொல்ல முடியாது. மேலும் எரிமலைக் குழம்புகள் வெடிக்கும் அபாயம் இருக்கிறது என்பதும், அந்த எல்லைக்கு அருகில் கல்பாக்கம் இருக்கிறது என்கிற புதிய தகவலையும் தருகிறார்.
கொஞ்சம் ஸ்லோவான பேச்சுதான் ... ஆனால் தகவல்கள் அவசியமானவையே.






புகழேந்தி அவர்களின் உரை..


12 comments:

rajamelaiyur சொன்னது…[பதிலளி]

என்ன சொல்வது என தெரியவில்லை

கோகுல் சொன்னது…[பதிலளி]

சரியான நேரத்தில் வந்திருக்கும் பதிவு.காணொளியை நேரமிருக்கும் போது பார்த்து விட்டு மீண்டும் வருகிறேன்!நண்பரே!
நீங்கம் கொடுத்துள்ள முன்னுரையிலே சில உண்மைகள்
வெளிப்பட்டுள்ளது!

Unknown சொன்னது…[பதிலளி]

@"என் ராஜபாட்டை"- ராஜா

நாம் ஒன்று நினைக்க இன்னொன்று நடக்கிறது

Unknown சொன்னது…[பதிலளி]

@கோகுல்

நன்றி கோகுல்...

நம்பிக்கையளிக்கும் செய்தி இன்னைக்கு கொடுத்திருக்கீங்க உங்க வலைப் பூவில்..

SURYAJEEVA சொன்னது…[பதிலளி]

கலக்குவோம் கலக்குவோம் கட்டம் கட்டி கலக்குவோம்... அணு உலைக்கு கட்டம் கட்டி கலக்குவோம்

மாய உலகம் சொன்னது…[பதிலளி]

விழிப்புணர்வு பதிவுக்கு நன்றியுடன்...காணொளியை பார்த்துவிட்டு கருத்திடுகிறேன் சகோ!

ராஜா MVS சொன்னது…[பதிலளி]

காணொளி என் கணினியில் தடைசெய்துள்ளார்கள்... நண்பரே...

கல்பாக்கம் பற்றிய ஒர் Pdf இது...
http://www.scribd.com/doc/70211660/Atomic-Reactor

பகிர்வுக்கு நன்றி... நண்பா...

Unknown சொன்னது…[பதிலளி]

@suryajeeva

என்ன சொல்ல வர்றீகன்னு புரியலையே?

Unknown சொன்னது…[பதிலளி]

@மாய உலகம்

நன்றி ராஜேஷ்,

பார்த்துட்டு வாங்க

Unknown சொன்னது…[பதிலளி]

@ராஜா MVS
உங்கள் தகவலுக்கு நன்றி..

N.H. Narasimma Prasad சொன்னது…[பதிலளி]

விழிப்புணர்வுப் பதிவு. பகிர்வுக்கு நன்றி அப்பு.

அம்பாளடியாள் சொன்னது…[பதிலளி]

விழிப்புணர்வூட்டும் பகிர்வு காணொளித் தொகுப்புடன் .
உங்கள் கடமை உணர்வைப் பாராட்டுகின்றேன் .வாழ்த்துக்கள் தொடர்ந்தும் இதுபோன்ற தகவலை வெளியிட .மிக்க நன்றி பகிர்வுக்கு .

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்